Definition List

Home » » அட...கடைசியில என்னடான்னு பாத்தா காதல்..!!

அட...கடைசியில என்னடான்னு பாத்தா காதல்..!!

Written By Unknown on Sunday 25 August 2013 | 04:34

அன்பு, காதல் என்பது எப்போதும் மறையாதது, பச்சோந்தி போல் நிறம் மாறாதது. இது எப்போது சாத்தியமாகுமென்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடக்கும் போது மாத்திரமே.

கணவன்-மனைவி இவர்கள் இரண்டு பேர்க்கிடையிலும் அவர்களுடைய அன்பு-காதல் மாறாமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்குல் புரிதல் கண்டிப்பாக சரிதல் ஏற்படாது இருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும்.
கணவன்-மனைவி இரண்டு பேருடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அதாவது அவர்கள் காதலித்து திருணம் செய்து கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் காதல் செய்த பருவ காலத்தில் எப்படி அன்பாக, பாசமாக, ஒருவருக்கொருவர் மிகைத்த காதல் கொண்டு இருந்தார்களோ அதனை அவர்கள் அவர்களது வாழ்வின் கடைசி எல்லை வரை தொடர வேண்டும்.

அதே போல்..நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஆனவர்கள் அவர்களது ஆரம்ப கால திருமண நாட்களில் எவ்வாறு ஒருவருக்கொருவர் அன்பாக, அரவணைப்பாக இருந்தார்களோ அந்த அன்பும் காதலும் வாழ்வின் கடைசி எல்லை வரை தொடர வேண்டும்.

கணவன்-மனைவி இரண்டு பேருக்கிடையில் பல பிரச்சினைகள் பூதாகரமாக வெடிப்பதும் உண்டு. அதன் கடைசி தருணமாக விவாகரத்து அமையும். அதற்கு காரணம் அவர்களுக்கிடையிலான புரிதல் குறைவதும் காதல் மங்கிச் செல்வதுமாகும்.

எனவே கணவன் மனைவியான உங்கள் இருவருக்குமிடையிலான அன்பையும் காதலையும் வலுப்படுத்துங்கள், ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசுங்கள்.

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.


0 comments:

Post a Comment

Blogger Themes